உச்சகட்ட பரபரப்பு – கடைசி பந்தில் வென்றது இந்தியா

ரீ20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் வெட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் அவுட் ஆனார். 4 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த சூர்யகுமார் 15 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 4 ரன் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டி அபார வெற்றிபெற்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles