நாவலப்பிட்டிய பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுக்குட்பட்ட பார் கேபல் கீழ்பிரிவு (உச்சிமலை) தோட்டத்தில் நேற்று நள்ளிரவு கிடைத்த பெறுபேறுகள் அமைய 28 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த பகுதியிலுள்ள ஒருவர், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு அவர்களின் நலன் கருதி கற்பித்தலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கடந்த வாரம் நோயினால் பீடிக்கப்பட்டு நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு அவருக்கு மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது.
எனினும், இவ்விடயம் தொடர்பில் அவர் யாருக்கும் தகவல்களை தெரிவிக்காத நிலையில் தொடர்ந்தும் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார் . இதற்கமைய பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் விளைவாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .அதில் 17 பேர் பாடசாலை செல்லும் மாணவர்களாவர்.
இவர்களை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்புவதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இன்றைய தினம் இந்த உரிய முன்னெடுப்புக்களை செய்ய இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
S. கெளஷி
