உடபுஸ்ஸலாவை 02 தோட்டங்களில் ஆலயங்கள் உடைப்பு

உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு தோட்ட ஆலயங்கள் (05) நள்ளிரவில் உடைக்கப்பட்டு தங்க நகைகள்,உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன.

உடப்புஸ்ஸலாவை டலோஸ் தோட்டம் முருகன் ஆலயம் மற்றும் எனிக் கீழ் பிரிவு தோட்டம் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் எனிக் கீழ் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு உள் நுழைந்துள்ள திருடர்கள் ஆலயத்தின் மூலஸ்தான அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணங்களை திருடிச்சென்றுள்ளனர்.

அதேபோல டலோஸ் தோட்டத்தின் முருகன் ஆலயத்தின் பிரதான கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்து உண்டியல் திருடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடப்புஸ்ஸலாவை பொலிசாருக்கு தோட்ட மக்கள் நேற்றுக் காலை வழங்கிய தகவலுக்கு அமைய விரைந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்,சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் உடப்புஸ்ஸலாவை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நுவரெலியா இரசாயன பகுப்பாய்வு மற்றும் தடையவியல் பொலிசாரும் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles