உடைந்து விழுந்தது பாலம் – ஆற்றுக்குள் விழுந்த லொறி: போக்குவரத்து தடை!

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (05) காலை மரக்கட்டைகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே குறித்த பாலம் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

பாலம் இடிந்து விழுந்ததில் லொறி ஆற்றில் விழுந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த, தங்காலை நோக்கிய போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles