உதயாவின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிந்துலை என்போல் தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதேச அமைப்பாளர் ரமேஷின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பூஜை வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் உள்ளிட்ட தோட்டத் தலைவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles