நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தான் செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நிராகரித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் உள்ளவர்களே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.எமது சங்கம் சுயாதீன சங்கமாகும். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டது கிடையாது. அதேபோல நானும் அரசியல்வாதிகளின் கையாள் கிடையாது. அரசியல்வாதிகளிடம் சோரம்போனதும் இல்லை. எமது சங்க உறுப்பினர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவருகின்றேன். இந்நிலையில் எனது குரல் வளையை நசுக்குவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ராஜின சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்தவர். சுகாதாரத்துறை என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டோம். தற்போதைய சுகாதார அமைச்சருடனும் இணைந்து பணியாற்றிவருகின்றோம்.” – என்றார்.










