க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான திகதி விவரம் எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய உயர்தரபரீட்சை சுமார் ஆறு வாரங்கள்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










