கபொத உயர்தரப்பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சீரற்ற காலநிலையால் மூன்று நாட்களுக்கு உயர்தரப்பரீட்சையை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்களுக்கு பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 3 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறமாட்டாது.
டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை முதல் மீண்டும் பரீட்சைகள் நடைபெறும். பரீட்சை அட்டவணையின் பிரகாரம் டிசம்பர் 4 ஆம் திகதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பரீட்சைகளே அன்றைய தினம் இடம்பெறும்.” – என்றார்.
அதேவேளை, பரீட்சை நடைபெறாத மேற்படி ஆறு நாட்களுக்குரிய பரீட்சைகள் டிசம்பர் 21 முதல் டிசம்பர் வரை நடைபெறும்.
கிறிஸ்மஸ் பண்டிகையைக் கருத்திற்கொண்டு டிசம்பர் 24,25 மற்றும் 26 ஆம் திகதிகளிலும் பரீட்சைகள் நடைபெறமாட்டாது.