2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாககூறிய அவர், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.










