உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பம்

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான சுற்றுநிருபம் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம் இதுவரை கிடைக்கப்பெறாத அதிபர்கள், மாகாண அல்லது வலய கல்வி அலுவலகங்களில் அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை அதிபர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles