உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விபரம் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
