” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொறுப்புடன் இடம்பெற்றுவருகின்றன. இது விடயத்தில் நிச்சயம் நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று உறுதியளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சிஐடியினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் கூட்டாக செயற்பட்டுவருகின்றனர்.
பிரதான சூத்திரதாரி யாரென்பதை உள்ளிட்ட விடயங்கள் பற்றி சிஐடி விசாரித்துவருகின்றது. பிரதான சூத்திரதாரிகளை மட்டுமல் அல்ல பொறுப்புக் கூறவேண்டியவர்களை நிச்சயம் நாம் நீதியின் முன் நிறுத்துவோம்.” – எனவும் பிரதி அமைச்சர் கூறினார்.
பேராயரின் கவலை நியாயமானது. அவரின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எமக்கும் காலம் அவசியம். எது எப்படி இருந்தாலும் நிச்சயம் பொறுப்பு நிறைவேற்றப்படும்.” – என பிரதி அமைச்சர் சுனில் வடகல மேலும் குறிப்பிட்டார்.