உறவாடத் துடிக்கும் சுதந்திரக்கட்சிக்கு ஜே.வி.பி. கதவடைப்பு!

” இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படும் என சு.கவின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. அதனால்தான் சிலர் இன்று மாற்றுவழியை தேடுகின்றனர். சுதந்திரக்கட்சியென்பது அரச பங்காளிக்கட்சி. பட்ஜட்டை அக்கட்சி ஆதரித்தது. அக்கட்சி உட்பட நாட்டில் பிரதான இரு கட்சிகளுடன் இணையமாட்டோம். ஆனால் மேற்படி கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் மக்கள் எம்முடன் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.” – என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles