” உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லர்கூட நூலகத்தை எரிக்கவில்லை – ஆனால் இங்கு ஒரு இலட்சம் நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்தார்கள்” – மனோ

” 1958, 1977, 1983 என வரிசையாக எங்களை உயிருடனும், எம் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்தார்கள்.

உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லரே, 2ஆம் உலக யுத்தத்தின் போது லண்டன் நூலகத்தின் மீது குண்டு வீச வேண்டாம் என்று ஆணையிட்டாராம். ஆனால், இங்கே இனவாத அரசியலர் 1981ல் ஒரு இலட்சம் நூல்களை கொண்ட யாழ் நூலகத்தையே எரித்து தமிழரின் அறிவு பெட்டகத்தையே எரித்தார்கள். இதையும் தாண்டிதான் இன்னமும் தமிழர்கள்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற “நோ மோர் ப்ளக் ஜூலை” என்ற சீர்திருத்தங்களுக்கான மக்கள் இயக்க கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க, மத்திய வங்கி குண்டு வழக்கின் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவித்துள்ளார். அதுபற்றி அறிவிக்கும் சிங்கள ஊடகங்கள் மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட அழிவுகளை காணொளியாக தொலைகாட்சி செய்திகளில் நினைவுறுத்தி காட்ட கண்டேன்.

இது உலகை உலுக்கிய கறுப்பு ஜூலை கலவரம் நடந்த நாட்கள். இதுபற்றியும் நினைவுறுத்தி, கறுப்பு ஜூலை கலவர எரிப்பு, அழிவு காட்சிகளை தேசிய ஊடகங்கள் காட்டவில்லை. ஏனெனில் கொழும்பு ஹவ்லக் நகரில் எங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. எங்கள் பல வாகனகங்கள் எரியூட்டப்பட்டன. புறக்கோட்டையில் எங்கள் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையடிக்கபட்டது. எல்லாம் எங்கள் தந்தை உழைத்து சம்பாதித்த சொத்துகள். எவரையும் ஏமாற்றி கொள்ளை அடிக்கப்பட்டவை அல்ல.

அவற்றையும் செய்திகளில் காட்ட வேண்டும் என நான் விரும்பவில்லை. எனக்கு பார்க்க விருப்பம் இல்லை. நினைக்கவும் விருப்பம் இல்லை. நான் வன்முறையை வெறுக்கிறேன். ஆனால் ஏன் இரட்டை கொள்கைகள் என கேட்கிறேன். ஒரு நாடு ஒரு கொள்கை என்கிறீர்கள். அப்புறம் ஏன் செய்தி அறிவிப்பில் கூட இரட்டை கொள்கை?

1958, 1977, 1981 யாழ் நூலக எரிப்பு, 1983… இவை எது தொடர்பில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. தண்டனை வழங்கப்படவும் இல்லை. இவை அனைத்துக்கும் காரணம் இவர்கள் சிங்களவர்கள். நாம் தமிழர். இது சிங்கள நாடு. பெளத்த நாடு. நாம் தமிழர்கள். இந்த சிந்தனை மாறனும். முதலில் குற்றம், தவறுகள் ஏற்கப்பட வேண்டும். அதுதான் பொறுப்பு கூறல். ஆனால், எதுவும் இல்லை.

இப்படி பொறுப்பு கூறல் நாற, மறுபுறம் அரசியல் தீர்வு நாறுகிறது. 13 மைனஸ், ப்ளஸ் என்று நாறுகிறது. வழமையாக அரசு இனப்பிரச்சினைக்கு ஏதோ தீர்வை தரும் போது எப்போதும் எதிர்க்கும் வழமையான எதிர்க்கட்சி அரசியல் இனி இல்லை என்ற உத்தரவாதம் மட்டுமே என்னால் தர முடிகிறது. 1983 முடிந்து இந்த 40 வருடங்களில் இவ்வளவு தூரம்தான் நாம் வந்துள்ளோம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles