ஐ.நா. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 10 ஆவது இடத்திலும் உள்ளன.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில், 150 இற்கு மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.
2020 இல் தலிபான்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்ததில் இருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது.