உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘ இந்திய இளைஞர்கள் ஸ்டார்ட்அப்கள் முதல் விளையாட்டு, விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை தேடித் தருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது.” எனவும் குடியரவுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
