உலக தலைவர்களுடன் அஜித்! மதுரை அஜித் ரசிகர்கள் வலிமைக்கு ஒட்டிய போஸ்டர் வைரல்

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நாளை ரிலீஸ் ஆகும் வலிமை படத்தை பார்ப்பதற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தியேட்டர்கள் திருவிழா போல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வலிமை படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதில் பல வித்யாசமான போஸ்டர்களும் அடங்கும்.

மதுரையில் இருக்கும் அஜித் ரசிகர்கள் தற்போது அஜித் வேட்டி சட்டையில் உலக தலைவர்கள் உடன் நடந்து வருவது போல போட்டோ பதிவிட்டு “உலக நாடுகள் எதிர்பார்க்கும் வலிமை” என போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வலிமை படத்தின் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை மாஸான படத்தில் பெரிய திரையில் பார்க்க உள்ளனர் என்பதால் முதல் நாளே படத்தை பார்க்க வேண்டும் என அதிக முனைப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் உடன் அஜித் கூட்டணி சேரும் இரண்டாவது படம் தான் வலிமை. அடுத்து இதே கூட்டணி மீண்டும் இணைகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது குறிபிடத்தக்கது.

Related Articles

Latest Articles