உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஜீவன் சந்திப்பு! எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆராய்வு!!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை இன்று (11.12.2023) சந்தித்து பேச்சு நடத்தினர்.

கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தடையின்றி நீரை விநியோகிப்பதற்கும் ஒரு இளம் அமைச்சராக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தறுவாயில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைத்தார்.

அதேபோல எதிர்கால திட்டங்கள் பற்றியும், அதற்கு உலக வங்கியின் பங்களிப்பு, ஒத்துழைப்பு, ஆலோசனை அவசியம் எனவும் உலக வங்கி தூதுக்குழுவினரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர், அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

உலக வங்கியின் உதவியுடன் நீர்வழங்கல் துறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றது.

ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் சுத்தமான குடிநீர் இலக்குக்கும் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு அமைச்சால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு தொடரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் எஸ். சமரதிவாகர, ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, சமூக நீர்வழங்கல் திணைக்கள தலைவர், வசீப் நீர் திட்டத்தின் பொறியியலாளர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles