சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை சமர்ஹில் தோட்ட மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேட்டறிந்தார்.
குறித்த மக்களின் லயன் குடியிருப்புகளை பார்வையிட்ட போது மக்கள் பெரும் ஆபத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நிரந்தர தனிவீடுகளை அமைப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியும். வென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உலர் உணவு பொதிகளை வழங்கும் தற்காலிக தீர்வுகளுக்கும் அப்பால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான நிரந்தர தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் என்று அனுசா வலியுறுத்தினார்.
இந்த இடர்காலத்தில் மலையகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் அபாயகரமான இடங்களை இணங்கண்டு அங்குள்ள மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை அமைத்து இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கிறது”- எனவும் அவர் வலியுறுத்தினார்.