நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 850 இலிருந்து ரூ. 950 ரூபாவாக ரூ. 100 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 1 கி.கி. பால் மா பொதியானது, ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,350 ரூபாவாக, ரூ. 230 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.
கொழுப்பு அற்ற (Non Fat) 400 கிராம் பால் மா பொதியானது, ரூ. 840 இலிருந்து ரூ. 1,050 ஆக, ரூ. 210 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
