உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை!

உள்ளகப் பொறிமுறையால் நீதி கிடைக்காது என்ற தொடர்ச்சியான வெளிப் படுத்தலை ஐ.நா. புறம்தள்ளுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்து தெரிவித்த போதே அவர்கள்இவ்வாறு குறிப்பிட்டனர்.

‘உள்ளகப் பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம்.அப்படி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஓர் இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்டகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளகப் பொறிமுறைஎப்படி சாத்தியமான முறையில் வழி வகுக்கும் என எமக்குத் தெரியவில்லை.

இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கிக்கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்தப் புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றைச் செய்தவர்கள் யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரிப் போராடி வரும் நாம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்30 ஆம் திகதி சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேசவிசாரணையினை வலியுறுத்தி வடகிழக்குதழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் – எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles