சட்டமாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட பின்னரே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் முடிவு வெளியிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் செயற்பாடுகளுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான முறைமை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அண்மையில்கூடிய தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தின் போது அது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அதன் இறுதியில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தற்போது, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடி அதிகாரம் கிடைத்துள்ள போதும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழு காரணமாக அந்த நடவடிக்கைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும் அதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொவது அவசியமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.










