இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு வரலாற்று வெற்றியை பெற்றுதந்தார்கள். உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் அதைவிட சிறப்பான ஆணையை வழங்குவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு நாம் செல்லும் வழியே உறுதியான வழியாக உள்ளது. எனவே, அந்த திசையை மக்கள் மாற்ற மாட்டார்கள். கடந்த தேர்தல்களின்போது எமக்கு வாக்களிக்காதவர்கள்கூட இம்முறை வழங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிராமத்துக்குரிய அரசியல் தலைமைத்துவம்தான் பிரதேச சபை, அதன் அதிகாரமும் அரசாங்கம் வசம் இருந்தால் திட்டங்களை சிறப்பாக செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
