உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தனித்து ‘பஞ்சாயுதம்” சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று அதன் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
336 உள்ளுராட்சிசபைகளில் பெரும்பாலான சபைகளுக்கு தனித்தே போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘உள்ளுராட்சிசபைத் தேர்தலில் எமது அணிக்கு வெற்றிகிடைக்கும் என நான் நம்புகின்றேன். ஊருக்காகவும், நாட்டுக்காகவும் இந்த தேர்தலை பயன்படுத்துமாறு முற்போக்கு சக்திகளிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.”- என்றார்.