தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழ் சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரை கமல், விஜய், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
மேலும் எல்லா தேர்தல்களிலும் நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருவார். ஆனால் இந்த முறை அவர் வரவில்லை, நடிகர் ரஜினியும் இந்தமுறை வாக்குப்பதிவை செய்யவில்லை.
அதுமட்டுமின்றி மற்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, த்ரிஷா, தனுஷ், வடிவேலு உள்ளிட்டவர்களும் வாக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.