உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? இன்று வெளியான அறிவிப்பு!

திட்டமிட்ட அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

உள்ளாட்சிமன்ற தேர்தலை மார்ச் 10 ஆம் திகதக்கும் நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக – தேர்தல் ஏற்பாடுகளை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறுகோரி  ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் இன்று,  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டு நடத்தப்படும் என தேசியத் தேர்தல் ஆணைக்குழு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தெரிவித்தார்.

மனுமீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறும்.

Related Articles

Latest Articles