ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் காலமானார்!

ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர்.

டுவிட்டர் தளத்தில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இவரது செய்திகளை நம்பகரமாக பின்தொடர்ந்து வந்தார்கள். இவரது செய்திகளை தங்களது தளத்தில் பகிர்ந்து வந்தார்கள்.

நேற்று செப்ரெம்பர் முதலாம் திகதி, தனக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டுவிட்டரில் அறிவித்திருந்தார். இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மரணமானார்.

Related Articles

Latest Articles