நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், பாழடைந்த வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிறப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை – கவவலை பாடசாலை சந்தி பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கசிப்பு தயாரிப்புக்காக தயார் நிலையில் இருந்த 60,000 மில்லி லீற்றர் கோடாவும் மற்றும் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன. கசிப்பு காய்ச்சிவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










