குருநாகலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதுபான விருந்து நடத்திய 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, ஹோட்டலில் இருந்த மேலும் சில சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குருநாகலை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.