ஊரடங்கு காலப்பகுதியில் சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

ஊரடங்கு காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் நோயாளர்கள் அவசர சிகிச்சை மற்றும் மருந்துகளை இடையூறு இன்றி பெற்றுக் கொள்ள இடமளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles