நாட்டில் அமுலில் ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படலாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” நாட்டின் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் பிரகாரம் ஊரடங்கு தொடர்பில் முடிவெடுக்கப்படும். இன்று ஒரு பிரச்சினையும் பதிவாகாத பட்சத்தில், அவ்வாறு பதிவாகாது. நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி, சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.” – என்றும் அவர் கூறினார்.
