நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம் எனவும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் பிறகும் நீடிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிமை தீர்மானிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும். இதன்போது தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு நிலைமை மீளாய்வு செய்யப்படும். அதன்பின்னரே ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, தளர்த்துவதா என்று முடிவெடுக்கப்படும் என சுகாதார தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊரடங்கு உத்தரவை 30 ஆம் திகதியுடன் தளர்த்துவதற்கும், கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அரசு ஆலோசித்துவருகின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.