பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் ஊவா மாகாண ஆளுநர் எ.ஜே.எம் முஸாமிலுடன் ஊவா மாகாணத்தின் எதிர்கால தமிழ் கல்வியின் மேம்பாடு தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இக் கலந்துரையாடலின் போது ஆளுநர் செயலாளர், அமைச்சு செயலாளர் மற்றும் தமிழ் கல்வி இயக்குனர் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதன்போது தமிழ் கல்வி சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆழமாக ஆலோசிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் ஊவா தமிழ் கல்வி அமைச்சு ஒரு நிர்வாகத்தின் கீழ் அமைந்திருந்த காரணத்தினால் தமிழ் கல்வியின் தரம் சரியான முறையில் மேம்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாகவே தமிழ் கல்வி அமைச்சு தனியான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
1.சிங்கள மொழி பாடசலைகளை விட தமிழ் மொழி பாடசாலைகளிலேயே அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது. இவ்விரண்டு மொழி ஆசிரியர்களை ஒரு நிர்வாக கட்டமைப்பில் ஒன்று சேர்க்கும் பட்சத்தில் இரண்டு மொழிமூலங்களும் சமமான நிலையிலேயே பார்க்கப்படும். ஆனால், தமிழ் மொழிமூலமான ஆசிரியர்களே அதிகமாக குறைப்பாடகவுள்ளனர். சமமாக பார்க்கப்படும் பட்சத்தில் புதிய தமிழ் மொழி ஆசிரியர்களை உள்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்படமாட்டார்கள். ஆகவே, தமிழ் கல்வி அமைச்சு தனியான நிர்வாகத்தின் கீழே நிர்வாகிக்ப்பட வேண்டும்.
2. அதேபோன்று நிதி ஒதுக்கீடு விடயத்திலும் சிக்கலான நிலைமையே எழக்கூடும். தமிழ் பாடசாலைகளிலேயே அதிகமான அடிப்படை வசதிகளுக்கான தேவைகள் உள்ளன. அதன் காரணமாக தமிழ் பள்ளிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், பொதுவான நிதி ஒதுக்கீடுகள் மூலம் சமாந்திரத்தை பேண முடியாது என்பதுடன், தமிழ் பாடசாலைகளுக்கு தனி பட்;ஜெட்களை தயாரிப்பதே பொருத்தமானமாக அமையும்.
3. இடம்மாற்றம் தொடர்பிலான விடயத்தில் மொழிப்பிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பெருந்தோட்டப் பகுதி ஆசிரியர்களை பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கே இடமாற்றங்களை வழங்குவது பொருத்தமானதாகும்.
4.இதன் மூலம் சிறந்த கல்வி தரங்கள் எளிய முறையில் கண்கானிக்க முடியும்.
உள்ளிட்ட விடயங்கள் இதன்போது செந்தில் தொண்டமானால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.