ஊவாவிலுள்ள பட்டதாரிகளுக்கு ஊவா மாகாணத்துக்குள்ளேயே அரசாங்க துறைகளில் தொழில் வாய்ப்பு வழங்குவதற்கு வழிசமைத்துகொடுக்குமாறு மாகாண தலைமை செயலாளரிடம், பிரதம அமைச்சரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாண தலைமை செயலாளருக்கும், செந்தில் தொண்டமானுக்குமிடையிலான சந்திப்பொன்று செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஊவா மாகாணத்தில் அரச துறைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அது தொடர்பில் பொது சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்து, ஆளணி பலம் தேவைப்படுகின்ற துறைகளுக்கு ஊவா மாகாண பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.