ஊவா மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரைகாலமும் வெளிவந்த பரீட்சை பெறுபேற்று புள்ளிகளில் தமிழ் மொழிப்பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளார் பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி புண்ணியமூர்த்தி அகலியா (194 புள்ளி).
இவரை பாடசாலை சார்பாக வாழ்த்துவதோடு குறித்த பரீட்சை புள்ளி பெறுபேறு, ஊவா மாகாண தமிழ் கல்விப்பிரிவிற்கும்,டு பசறை கல்வி வலயத்திற்கும் எம் சமுகத்திற்கும் பெருமையை தேடித்தந்த பெறுபேறாகும் என பலரும் பாராட்டுகின்றனர்.
இம்மாணவியின் கல்வி பெறுபேற்றிற்கு அயராது பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி புகட்டி வழிகாட்டி பயிற்றுவித்த ஆசிரியர் நடராஜா புவனேஸ்வரனை, அதிபர் ஆசிரியர்கள் சார்பாகவும் பாடசாலை சமுகம் சார்பாகவும் வாழ்த்திப்பாராட்டுகின்றோம் என்று கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
