ஊவா மாகாண 24வது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன இன்று (13) பதுளையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2000 ஆம் ஆண்டு உதவி காவல்துறை கண்காணிப்பாளராக காவல் துறையில் இணைந்த அவர், முன்னதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற திரு. மகேஷ் சேனாரத்ன, குற்றவியல் சட்டம் மற்றும் சமூகவியலில் முதுகலைப் படிப்புகளை நிறைவு செய்துள்ளார்
தென் மாகாணத்தில் பணியாற்றிய காலத்தில், தென் மாகாணத்தில் பரவி வரும் பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு நடடிக்கைகளை செயல்படுத்தினார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் ஊவா மாகாணத்தில் பரவி வரும் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதும் மாகாண மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதும் தனது நோக்கமாகும் என்றும், குற்றச்செயல்களை குறைக்காமல் அவற்றை ஒழிப்பதே தனது நோக்கம். அதன்படி, மாகாணத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.
ராமு தனராஜா










