“நாட்டு மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அணியே தேசிய மக்கள் சக்தி என்பதால் மக்களின் ஆதரவு எமக்கே உள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அணியின் வேட்பாளர் நான்தான், எனவே, தேர்தலில் எமக்கு வெற்றி நிச்சயம்.
நாட்டின் அரசியல் கலாசாரம் எவ்வாறு உள்ளது என்பதை கடந்த சில நாட்கள் தெளிவுபடுத்திவிட்டன.
அந்தளவுக்கு தாவல் அரசியல் இடம்பெறுகின்றது. கொள்கையற்ற அரசியல்வாதிகள் அங்கும், இங்கும் தாவுகின்றனர். இந்த அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய அணியினர்தான் நாம். முக்களுக்கான அரசியலை நிச்சயம் முன்னெடுப்போம்.” – என்றார்.
