‘எங்கள் கூட்டணியில் மைத்திரிக்கு இடமில்லை’ – பொன்சேகா திட்டவட்டம்

” மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்தவொரு கொடுக்கல் – வாங்கலும் இல்லை. அவருடன் எமது கட்சி கூட்டணி அமைக்காது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

” அரசியல் சூழ்ச்சிமூலம் நல்லாட்சியை மைத்திரிபால சிறிசேனவே குழப்பினார். அவர் எப்படிபட்டவர் என்பது மக்களுக்கு தெரியும். இனியும் அவரால் மக்களை ஏமாற்ற முடியாது.

தான் பொலன்னறுவைக்கு சென்றுவிடுவேன் என அறிவிப்புவிடுத்த மைத்திரிக்கு தற்போது மீண்டும் பதவி ஆசை வந்துள்ளது. அதனால்தான் புதிய பயணம் பற்றி கதைக்கின்றார். அவரின் கனவு நனவாகாது. அவருடன் எமக்கு கொடுக்கல் – வாங்கல் கிடையாது. கூட்டணி என்ற பேச்சுக்கும் இடமில்லை.” – என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles