எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்லாஸ் தோட்டத்தின் கீழ் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரரின் மகளின் காதல் விவகாரம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.










