எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சம் ஆரம்பமானது.

கடந்த நாட்களில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து 27ஆம் திகதி சப்பர திருவிழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை முற்பகல் நவோத்திர சகஸ்ர சங்காபிஷேகம் நடைபெறவுள்ளதுடன், இதன் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் தேர்த்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
தேர்த் திருவிழவை தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை காலை களனி கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாலை திருவூஞ்சல் மற்றும் கொடியிறக்கம் நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
இதேவேளை சனிக்கிழமை காலை பாற்குட பவணியும் பிராயிச்சித்த அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
