எதிரணியில் அமர்ந்தார் ஜீவன்! நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கவும் முடிவு!!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பியும், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.

அரச பங்காளிக்கட்சியாக செயற்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை ஏப்ரல் 04 ஆம் திகதி விலக்கிக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அறிவித்தது.

இதற்கமையவே காங்கிரஸ் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் எதிரணியில் அமர்ந்தனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜீவன் தொண்டமான் இருக்கின்றார். கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சி கூட்டத்திலும் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், ரமேஷ் உள்ளிட்ட சில தரப்பினர் பிரேரணையை ஆதரிக்காது, நடுநிலை வகிக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

Related Articles

Latest Articles