” ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை.” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது. நாம் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்யவில்லை. எனவே, சிறுபிள்ளைத்தனமான அறிவிப்புகளை விடுப்பதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்.
செய்ய முடியும் என உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்கள். எனவே, உறுதிமொழிகளை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்வரை நாம் அரசாங்கத்தை பாதுகாப்போம்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.” – என்றார் முஜிபூர் ரஹ்மான் எம்.பி.