எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா நட்புறவையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் எனத் தூதுவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles