எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு இரகசிய பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என வெளியாகும் செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு நிராகரித்துள்ளார்.
‘ எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்பந்தமாக எவ்வித இரகசிய பேச்சு நடக்கவில்லை. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் செய்வதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழவில்லை. இது பற்றி நாடாளுமன்றக்குழுவும் அவதானம் செலுத்தவில்லை. கட்சிக்குள் இப்படியான எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவும் இல்லை.” – எனவும் அவர் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
