” எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சஜித் பிரேமதாச நீடிப்பது அரசாங்கத்துக்கு நல்லது.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பதவிகளுக்கு டிசம்பர் மாதம் என சஜித் கால எல்லை நிர்ணயிப்பார். ஆனால் அது எந்த வருடமாக இருக்கும் என கூறுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பலரும் போட்டியிடுகின்றனர். அதனை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சஜித் போராடுகின்றார். மாறாக அரச தலைவர் பதவிக்கு வருவது அவரின் எண்ணமாக இல்லை.
அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்திவருகின்றது. சஜித்தால் என்ன செய்ய முடியும்? அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருப்பது அரசாங்கத்துக்கு நல்லது.” – என்றார்.