எதிர்வரும் 25 வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாராயினும், வைத்தியசாலைகள், தகனசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles