எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்!

“ எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்துக்காட்டட்டும்.” –

இவ்வாறு அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்த நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உங்கள் கணவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிதா மேலும் கூறியவை வருமாறு,

“எனது கணவர் இலங்கையில் இருக்கவில்லை. இங்கிலாந்தில் கல்வி பயின்றார், டுபாயில் வசிக்கின்றார். நான் அறகலயவில் ஈடுபட்டபோது டயஸ்போரா முத்திரை குத்தப்பட்டது. எனது கணவர் போராட்டத்தைக்கூட விரும்பவில்லை.

தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுமானால், எனது கணவருக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஏற்கலாம். ஆனால் தமிழர் என்ற காரணத்துக்காக புலிகள் என முத்திரை குத்துவது ஏற்புடையது அல்ல. அவருக்கு புலிகளுடன் தொடர்பிருந்தால் நிரூபித்துக்காட்டட்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles