“என்னிடம் கதைவிட வேண்டாம் – நானே ஒரு கதாசிரியர்” – முரளிமீது மனோ பாய்ச்சல்

” தடை செய்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.” இவ்வாறு முத்தையா முரளிதரனிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள்.

அதை விடுத்து, தான் பிறந்த தேசிய இன சமூகத்தை தானே இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகம் வேண்டாம்.

இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட இழிவு வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட காணொளி “ட்ரேலரில்” பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து பகிரங்கமாக காட்டியுள்ளேன்.
கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.
நானே ஒரு கதாசிரியர். எனக்கு இதுபற்றி தெரியும்.

அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று மாற்றி போடுங்கள். எல்லாம் சரியாக வரும்.

Related Articles

Latest Articles