பாடசாலை மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் நீண்ட காலமாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகிசிய தகவலினையடுத்து நோர்வூட் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பிரேமலாலின் வழிகாட்டலில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலசரக்கு தூள் போன்று மிகவும் சூக்சுமான முறையில் 400 கிராம் கொண்ட 16 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட 6400 கிராம் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த 400 கிராம் அடைக்கப்பட்ட பக்கட் ஒன்று சுமார் 6000 ரூபாவுக்கும் 20 கிராம் பொதி செய்த பக்கட் ஒன்று சுமார் 300 ரூபாவுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் குறித்த போதை பொருள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படுவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துளளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்