எபோட்ஸ்லி தோட்டத்தில் தீ – ஏழு வீடுகள் சேதம்

ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.

20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.

இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles